மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ?
21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ?
கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ? புற்று நோய்க்கு மரபு வைத்திய முறைகளை , மாற்று வைத்திய முறைகளை பயன்படுத்துவதால் உள்ள சாதக பாதகங்கள் யாவை ?
இது குறித்து வியாழன் 20/05/2021 இரவு 8 மணி முதல் 9 மணி வரை Guru Bruno’s Virtual Class Room இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் புதன் 18/01/2023 இந்திய நேரம் இரவு 9 மணி முதல் 9:40 வரை உரையாடுவோம்
Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது
இரண்டாம் முறை வகுப்பை எடுக்க தூண்டிய முகநூல் பதிவு இது தான்.
என் பால்ய நண்பன் அபி ரெண்டு நாள் முன்ன தவறிட்டான்.
“WHY ABI SHOULD DIE?”இது ஒரு நைஜீரியாக்காரர் என்கிட்ட கேட்ட கேள்வி!
4 வருசம் முன்ன Nasopharyngeal Cancer னால பாதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்கு அப்புறம் சரியாகி வந்தான். ரொம்ப கடுமையான சிகிச்சை ஒரே நேரத்துல chemotherapy , radiotherapy ன்னு கொடுத்ததுல 6 மாசத்துல மொத்தமா குணமாகிட்டான். ஒரு வருசத்துக்குள்ளவே ரொம்ப இயல்பான வாழ்க்கைகுள்ள வந்துட்டான்.குணமாகின பிறகு அடுத்த 2 வருசம் Post Cancer Treatment-டும் அலோபதி தான் எடுத்துக்கிட்டான்! அதுவரை ரொம்பவே நல்லாத்தான் இருந்தான். யாருடைய வழிகாட்டுதல்ன்னு தெரியல, திடீர்னு வெஜிட்டேரியனா மாறி ஆயுர்வேதாவுக்கு மாறிட்டான். அதுக்கப்புறம் அவன் உடம்பு ரொம்ப ஒல்லியாக ஆரம்பிச்சுது.
அவனை பாக்குறப்ப லாம் ஏன் ஆயுர்வேதா மாறினன்னு திட்டிக்கிட்டே இருப்பேன். அதுனாலயே எனக்கும் அவனுக்கும் சண்டை வரும். கடைசி ரெண்டு மாசம் என்னோட semester exam, நண்பனோட அம்மாவுக்காக ஹாஸ்பிட்டல் அலஞ்சதுன்னு நான் கண்ண மூடி தொறக்குறதுக்குள்ள ஓடிருச்சு.
அந்த நேரம் அபியோட உடல்நிலை ரொம்ப மோசமாகிருக்கு. எங்க சொன்னா திட்டுவேன்னு ஒரு வார்த்தை சொல்லல. திடீர்ன்னு ஃபோன் பண்ணி அவன் இறந்துட்டான்னு சொன்னாங்க.
எனக்கு அழவும் நேரம் இல்ல என்னாச்சுன்னு யோசிக்கவும் நேரம் இல்ல. அவங்கம்மாவுக்கு ஏதாவது ஆகிருமோன்னு நெனப்பெல்லாம் அங்கேயே இருந்துச்சு ஒருபக்கம். அவனை அடக்கம் பண்ற வர எனக்கு எதுவுமே புரியல. எதையும் process பண்ண முடியல!
அபி வீட்டுக்கு வெளிய காலையில இருந்து நைட் வர ஒரு நைஜீரியாக்காரர் ஒக்காந்திருந்தார். அவர்ட்ட “உங்களுக்கு அபிய தெரியுமா”ன்னு கேட்டேன்.
“Abi is my son” அப்டின்னார். “He’s a very good boy, we’ll go to church together. He used to pick me at main road and drop me in my home. I know how much he suffered to win over that cancer. Unwantedly he took siddha ( he meant ayurveda) that’s the problem.” அப்டின்னார்.
“My country people used to come here for treatment and they are getting cured. I came here with stroke when i came back to India on 2018, now look me, Do I walk like a man who had stroke? People all over world are coming to Chennai for getting cured”
“Then, Why should Abi die?” அப்டின்னு கேட்டாரு? அந்த ஒரு கேள்வி என்னைய Haunt பண்ணிட்டே இருக்கு.
கைல இருந்த நண்பன இழந்துட்டு ஒக்காந்துட்டு இருக்கேன். அவனும் படிச்சவன்தான் சுத்தி இருந்த எல்லாரும் படிச்சவங்க தான். ஆனா என்ன பயன்? இன்னமும் critical medical care வேண்டிய எடத்துல சித்தா, ஆயுர்வேதா ன்னு போயி உசுர பறிகொடுத்துட்டு தான இருக்கோம்.
நேபாள் போறதுக்காக உத்தர பிரதேஷ் ரயில்ல போன சமயம் ஒரு ஹிந்தி குடும்பம் சென்னையிலிருந்து எங்களோட travel ஆனாங்க. உத்தர பிரதேசத்துல மஹாராஜ் கஞ்ச் இடத்தை சேர்ந்தவங்க. அவங்க பையனோட கண்ணு operationக்கு சென்னை வந்துட்டு வீடு திரும்பிட்டு இருந்தாங்க.
“ஏன் சென்னை வர இதுக்காக வந்தீங்க அங்க எங்கயுமே இதை செய்ய முடியாதா?”ன்னு கேட்டோம்.
உத்தர பிரதேஷ்ல அந்த கண் பிரச்னைக்கான சிகிச்சை எங்கயும் இல்லையாம். நேபாள் அவங்களுக்கு ரொம்பக்கிட்ட தூரம்தான், காத்மண்டுல பண்ணனும்ன்னா 17 லட்சம் செலவாகும்ன்னு சொன்னங்களாம். சென்னை வந்து தங்கி பண்ணிட்டு போக மொத்தமா அவங்களுக்கு தனியார் மருத்துவமனைல ஆன செலவு 1 லட்சம் தான்.
தமிழ்நாட்டுல எந்த மாதிரியான மருத்துவத்துக்கும் குறைச்சலே இல்ல. எல்லாமே இங்க சாத்தியம். எல்லா நாட்ல இருந்தும் medical tourism வராங்க. நம்ம மக்கள் ஏன் சாகணும்? Critical ஆன எல்லா பிரச்னைக்கும் ‘அலோபதி’ல பதில் இருக்குறப்ப, ஏன் சித்தா , ஆயுர்வேதான்னு நம்ம மக்கள் சாகணும்? இப்ப வர அவர் கேட்ட அந்த கேள்வி என்னைய செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு.
எனக்கு அவன 2009ல் இருந்து தெரியும், 2015-2016 11th&12th படிக்குறப்ப ஒரே கிளாஸ் நானும் அவனும். இன்ஜினீயரிங் படிச்ச அவனுக்கு photo எடுக்கனும்ன்னா கொள்ளை ஆசை. 2017, நான் விகடன்ல மாணவ நிருபராகி எழுதிட்டு இருந்தேன். எப்டியாச்சும் media உள்ள அவன் வந்துரனும்ன்னு நெனச்சேன். அவன அடுத்த வருச batchக்கு அப்ளை பண்ண சொன்னேன். கில்லி மாதிரி தேர்வாகி வந்தான் மாணவ புகைப்பட நிருபரா. அவ்ளோ அழகா படம் புடிப்பான்!
அவனோட ஒரு வருட பயிற்சி முடிஞ்சதுக்கான விகடன் சான்றிதழக்கூட நான்தான் மேடையேறி வாங்கினேன். ஏன்னா அதுக்குள்ள கேன்சர் அவனை படுக்க வெச்சுருச்சு. Chemotherapy , Radiotherapy ன்னு 6 மாசத்துல மீண்டு சகஜமா மாறின அவன் ஆயுர்வேதா எடுக்குறவர நல்லாத்தான் இருந்தான். கடைசியா அலோபதி ஹாஸ்பிட்டல்ல கொண்டு போயி காமிக்க அவங்க, “ஒரு வருசமா ஏன் அலோபதி treatment எடுக்கல”ன்னு தான் கேட்ருக்காங்க.
“நீங்க என்ன டாக்டரா? அலோபதிய விட்டுட்டு வேற treatment போறதுக்கு?”ன்னு கேட்ருக்காங்க. நம்மலாம் இஷ்டத்துக்கு ஒரு treatment பாக் குறதுக்கு நம்ம டாக்டர் கிடையாதுதான?
ஒரே area நானும் அவனும். ஒரே school. Media லயும் ஒன்னா வேலை பாத்தோம். எங்க பாத்தாலும் அவன் நினைவா மட்டுமே தான் இருக்க. இப்போ கூட அவன் கல்லறைக்கு போகணும்போலவே இருக்கு.
தாங்கல எனக்கு! இதுக்குமேல எழுதவும் முடியல. அநியாயமா என் நண்பன இழந்துட்டு நிக்கிறேன். அவன காதலிச்ச பொண்ணு அடிச்சுக்கிட்டு அழுதா! ரெண்டு நாளா அங்க நடந்ததுலாம் என்னைய haunt பண்ணி உள்ள எறங்கிட்டே இருக்கு. பிளீஸ், உடம்புக்கு வெளிய தடவிக்குறதுக்கு வேணா இந்த சித்தா ஆயுர்வேதாலாம் உதவலாம், critical caseக்கு லாம் அலோபதி தவிர வேற எதுலயும் treatmentன்னு போயி யார் உசுரையும் வாங்கிடாதீங்க. ப்ளீஸ். English medicine மட்டும்தான் proved evident scientific medicine.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I lost my childhood friend Abi before a couple of days.
“Why Abi should die?”
A Nigerian acquaintance asked me this question.
Abi had been diagnosed with Nasopharyngeal Cancer before four years. After six months of intensive chemotherapy and radiotherapy, he had completely recovered within six months. He had resumed his usual life within one year.
Over the next couple of years, Abi had only continued Post Cancer Treatment and Evidence-based medicine during the convalescing phase. He was completely healthy during that period. Due to an unknown misguidance, he suddenly converted into a vegetarian and started taking Ayurveda medicines. His body drastically thinned over a short period of time.
It also became a point of conflict between us, and I started arguing with him about taking Ayurveda medicines. These last couple of months, I got busy with my semester exams and managing healthcare logistics for a friend’s parent. Abi’s health had worsened during this phase and I was not informed about his condition as I might scold him. All on a sudden, I got a phone call informing me that he’s no more.
I could neither cry nor process the information. I was also worried about his mother’s health. I could not process anything until completing the final rites.
A Nigerian was sitting outside Abi’s home throughout the day. I asked him if he knew Abi.
“Abi is my son”, he said.
“He’s a very good boy, we’ll go to church together. He used to pick me at main road and drop me in my home. I know how much he suffered to win over that cancer. Unwantedly he took siddha ( he meant ayurveda) that’s the problem.”, he added.
“My country people used to come here for treatment and they are getting cured. I came here with stroke when i came back to India on 2018, now look me, Do I walk like a man who had stroke? People all over world are coming to Chennai for getting cured”
“Then, Why should Abi die?” He asked me, and I’m still shaken and haunted by his question.
I bereft of a good friendship today. He was educated, and he was surrounded by educated people, but what is the use? We are mindlessly replacing Siddha, Ayurveda in place of critical medical care, and losing valuable human lives.
When we were traveling on a Uttar Pradesh train en route Nepal, a Hindi family was on the trained with us. They hailed from Maharaj Kanj, UP. They were returning home after completing an eye surgery for their child.
We asked them why they had chosen Chennai, instead of choosing a place that is closer to their hometown.
They had responded that the respective medical facility was not available in UP. Though Nepal is a closer option, it was far expensive. The surgery would have cost 17 lakhs at Kathmandu, and it had cost only one lakh rupees for complete surgical process at a private hospital and accommodation expenses at Chennai.
Tamilnadu has an enormous healthcare infrastructure, and every option is possible here. We see people from various countries visiting our state on a medical tour. Why should our people die? When evidence-based medicine has solutions for all health conditions that demand critical attention and care, why people should choose ayurveda, and siddha, only to suffer and die later?
His question still feels like a slipper shot.
I had known him since 2009. We studied 11th and 12th std together in 2015-16. He pursued engineering but he was deeply passionate about photography. I was a trainee press correspondent at Vikatan in 2017. I really wanted him to pursue a career in Media. I asked him to apply for the training scheme in the following year. He was selected as a trainee photographer, and shot many lovely photos!
After a year, I went up on the dias and collected his certificate of completion, because he was diagnosed with cancer by then. After six months of radiotherapy and chemotherapy, he resumed his normal life. Everything was alright until the point where he had started taking ayurvedic medicines. When he was finally admitted in an allopathic hospital, the only thing that they had asked was why he had stopped taking allopathic treatment.
“Are you a doctor to choose some other ways of treatment?” they had asked him.
We are not doctors to choose treatment as per our will. True, right?
We’re from the same locality. We studied at the same school. We worked at the same media organisation. I’m flooded by his memories now. I have been thinking about visiting his cemetery.
I’m undone and everything that has been happening around me is unbearable. I couldn’t write any further. It is a terribly unfair loss. His lover was beating herself and sobbing at the funeral. Whatever has happened over the couple of days has been hauntingly consuming me.
This is my humble request. The Siddha or Ayurveda medicines might be suitable for external application. Kindly don’t sabotage the precious lives by not choosing evidence-based medicine for critical healthcare conditions. (English medicine) Evidence-based medicine should be the one and only available, trustworthy form of care.