கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள் + ஓமிக்ரான்

Online Class
Online Class

கொரோனா பெருந்தொற்று குறித்து விளங்கி கொள்வதில் பலருக்கும் பல குழப்பங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது
ஏன் என்று யோசித்தால் சில பல காரணங்கள் தோன்றுகின்றன

முதலில்

  • நோய் *பரவுதல்* வேறு (* infectivity, communicability*)
  • நோய் *பாதிப்பு* + நோயினால் *மரணம்* என்பது வேறு ( *virulence, pathogenesis, death* )

பலருக்கும் இந்த அடிப்படை தெரியவில்லை. அதே போல் பாதிப்பு என்பதும் இரண்டு வகையில் ஏற்படலாம்

  • *வைரசினால் ஏற்படும் பாதிப்புகள்* வேறு (*Virus Induced Damage to Cells*)
  • *உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினால் ஏற்படும் பாதிப்புகள்* என்பது வேறு ( *Immunity Induced Damage to Cells* )

என்பதையும் பலர் அறியவில்லை

அடுத்து 

  • *தடுப்பது* வேறு (Prevention)
  • *கண்டுபிடிப்பது* வேறு (Detection)
  • *கட்டுப்படுத்துவது* வேறு (Containment)
  • *குணப்படுத்துவது* வேறு (Cure)

இந்த அடிப்படைவிஷயங்களை யாரும் பேசவில்லை
அல்லது பேசியவர்களை பெரும்பாலனவர்கள் கேட்கவில்லை
என்பதுதான் இந்த அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று நினைக்கிறேன் 

இதனால் தான் பலரும்

  • ஒரு விஷயத்தை ஏன் செய்கிறோம்
  • நாம் செய்யும் செயல் நோய் பரவுவது குறித்தா, பாதிப்பு குறித்தா
  • நாம் செய்யும் செயல் தடுப்பு நடவடிக்கையா, கண்டுபிடிக்கும் நடவடிக்கையா, கட்டுப்படுத்தும் நடவடிக்கையா, குணப்படுத்தும் நடவடிக்கையா,

என்ற புரிதலே இல்லாமல் செயல் பட்டு கொண்டுள்ளார்கள்

எனவே இது குறித்து நமது நண்பர்கள் 16.05.2021 மாலை 6:30 முதல் 8:30 வரை கூகிள் மீட் மூலம் பேசினோம்.

ஓமிக்ரான் குறித்த உரையாடலுக்கும் மீண்டும் கூகிள் மீட்டில் (சுட்டி: www.gurubruno.info/class ) 28.12.2021 இரவு 8:00 முதல் 9:00 வரை மீண்டும் உரையாடலாம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Online Class
Online Class

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *